Editorial / 2019 ஜூலை 01 , பி.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் ஆலயத்தின் வருடாந்த எசல பெரஹரா நிகழ்வையொட்டி, மேலதிக கடமைக்காக வருகைதரும் பொலிஸாருக்கு, தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், கதிர்காமத்திலுள்ள, சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க, ஊவா மாகாண கல்வித் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய, கதிர்காமம் தேசிய பாடசாலை, சசிந்திர ராஜபக்ஷ ஆரம்ப பாடசாலை, தெடகமுவ மகா வித்தியாலயம், கோதமிகம கனிஷ்ட வித்தியாலயம், செல்லக் கதிர்காமம் ஆகிய பாடசாலைகள், தங்காலை பொலிஸ் அதிகாரிகளுக்கு நாளை மாலை (02) கையளிக்கப்படவுள்ளன.
குறித்த பாடசாலைகள் அனைத்தும், எசல பெரஹரா உற்சவத்தின் பின்னர், 18 ஆம் திகதி, கல்வி நடவடிக்கைகளுக்காக மீள திறக்கப்படவுள்ளன.
37 minute ago
50 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
50 minute ago
59 minute ago
1 hours ago