Princiya Dixci / 2015 ஒக்டோபர் 23 , மு.ப. 06:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

கனடிய நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற லிபரல் கட்சிக்கும் அதன் தலைவர் ஜுஸ்டின் ட்ரூடோவுக்கும் கனடியத் தமிழர் பேரவை வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டுள்ளதுடன், ஸ்காபரோ றூஜ் பார்க் தொகுதியில் அமோக வெற்றியீட்டி நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவான ஹரி ஆனந்தசங்கரிக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது.
இது குறித்து கனடியத் தமிழர் பேரவையின் தலைவர் இராஜ் தவரட்ணசிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஹரி ஆனந்தசங்கரி, கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாகக் கனடியத் தமிழர் பேரவையின் செயற்பாடுகளில் ஆர்வத்தோடு பங்கேற்று வந்துள்ளார். உண்மையான தலைமைப் பண்புக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் இவர் தமிழ் மக்களுக்கும் ஏனைய இனத்தவருக்கும் முன்னுதாரணமான தலைவராக விளங்கினார்.
ஸ்காபரோ நகரில் பலஆண்டுகளாக வாழ்ந்து வருவதோடு நீண்டகாலமாக நகரின் நலனுக்காக உழைத்து வருபவர். இதன் வாயிலாகக் சமூகத்தின் பெரும் ஆதரவைப் பெற்றவர். கனடாவிலும் உலகெங்கும் குறிப்பாக ஈழத்தில் வாழும் நலிவுற்ற மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் உயர்வுக்காகவும் அயராது உழைத்தவர்.
கனடியத் தமிழர் பேரவையில் ஆற்றிய பணிகள் அவரது முழுமையான குமுகப் பணிக்கு நல்ல எடுத்துக்காட்டாகும். தன் பல்வேறுபட்ட ஆற்றல்களை நாடாளுமன்றத்தில் பயன்படுத்துவார் என்பதும் புதிய அரசில் ஒரு முக்கிய பங்காளராய்க் கனடிய மக்களின் நலன்களைப் பேண உழைப்பார் என்பதும் மகிழ்ச்சி தருகிறது என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடியத் தமிழர் எதிர்கொள்ளும் பல சிக்கல்களுக்குத் தீர்வு காணப் புதிய அரசுடன் இணைந்து பணியாற்றக் கனடியத் தமிழர் பேரவை தயராகவுள்ளது என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



7 minute ago
19 minute ago
24 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
19 minute ago
24 minute ago
32 minute ago