Editorial / 2020 டிசெம்பர் 14 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொவிட்-19 நோயால் பீடிக்கப்பட்டு, மரணமடையும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களைத் தகனம் செய்வதற்கு, கடுமையான எதிர்ப்புத் தெரிவித்துள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஷாஹிர் மௌலானா, தனிமனித போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தார்.
.அதிகளவான ஜனாஸாக்கள் தகனம் செய்யப்பட்ட பொரளை, கனத்தை மயான நுழைவாயிலில் வெள்ளைத் துணிகளைக்கட்டித் தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
'கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களின் உடலங்கள் தகனம் செய்யப்படுவதற்கு எதிராக, அமைதியான முறையில் பலமான எனது எதிர்ப்பை வெளியிடுகின்றேன்' எனத் தனது முகப்புத்தகத்தில் புகைப்படத்துடன் பதிவொன்றையும் இட்டுள்ளார்.
'பிறந்து 20 நாள்களேயான பாலகன் ஷாயின் ஜனாஸா, இங்குதான் எரியூட்டப்பட்டது. முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த 100 பேரின் ஜனாஸாக்களும் இங்குதான் வலுக்கட்டாயமாகத் தகனம் செய்யப்பட்டன' எனக் குறிப்பிட்டுள்ளார்.
'எத்தனை முறை கோரிக்கைகள் முன்வைத்தாலும், அவை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எனவே, இது ஒரு தேசத்தின், கனத்த அவமானச் சின்னமாக, இந்த மயானக் கதவில், இந்த வெள்ளைத் துணிகள் தொங்கட்டும்' என, அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
11 minute ago
25 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
25 minute ago
42 minute ago