S.Renuka / 2026 ஏப்ரல் 02 , பி.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதான நிறைவேற்று அதிகாரி (CEO) கபில சந்திரசேனவை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே, இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபருக்கு பிணை வழங்குவதற்கு போதுமான விசேட காரணங்கள் எவையும் நீதிமன்றத்தில் முன்வைக்கப்படாததால், அவரது பிணை கோரிக்கையை நீதவான் நிராகரித்துள்ளார்.
சந்தேகநபர் பிணையில் விடுவிக்கப்பட்டால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாக லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியது. எனவே, விசாரணைகள் முடியும் வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது.
14 minute ago
23 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
23 minute ago
34 minute ago