2025 மே 06, செவ்வாய்க்கிழமை

கப்பலில் பாரிய தீ: வெடிப்பு சத்தமும் கேட்டது

Editorial   / 2024 ஓகஸ்ட் 11 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த சரக்குக் கப்பலில் ஞாயிற்றுக்கிழமை (11) அதிகாலை தீ மற்றும் வெடிப்பு ஏற்பட்டதாக இலங்கை துறைமுக அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

துறைமுக தீயணைப்புப் பிரிவு உட்பட துறைமுக ஊழியர்கள் தீயைக் கட்டுப்படுத்தி அணைத்ததாகவும், தீயை அணைக்க முடியாவிட்டால் பெரும் அழிவை ஏற்படுத்தியிருக்கும் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

தீயினால் கப்பலுக்கு ஏற்பட்ட சேதம் இதுவரை மதிப்பிடப்படவில்லை எனினும் சரக்கு மற்றும் கப்பலுக்கு அதிக சேதம் ஏற்பட்டுள்ளதாக சிரேஷ்ட அதிகாரி மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X