Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Editorial / 2018 ஓகஸ்ட் 28 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
கம்பஹா மாவட்டத்தின் படுவத்தவில் இரகசியமாக இராணுவ முகாம் ஒன்று இயங்கிவந்தமை தொடர்பில் தனக்கு தெரியும் என, இராணுவப் புலானய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு சித்தரவதை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணை நேற்று கல்கிசை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட பின்னர் தடுத்து வைக்கப்பட்டிருந்த, கம்பஹா - பதுவத்தவில் இராணுவத்தின் இரகசிய முகாம் ஒன்று இயங்கியமை தொடர்பில், மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவுக்கு தெரியும் என, அவரது சட்டத்தரணி ஷெகான் சில்வா நீதிமன்றத்துக்கு தெரிவித்துள்ளார்.
2008ஆம் ஆண்டு மே மாதம் ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கின் முதல் சந்தேகநபரான மேஜர் புலத்வத்த, அளித்துள்ள சாட்சியத்தில், இராணுவப் புலனாய்வுப் பணியகத்தின் வழிகாட்டலின் படியே படுவத்த இரகசிய முகாம் இயங்கியதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சட்டத்தரணி ஷெகான் சில்வா வழங்கிய தகவல்கள் தொடர்பாக, மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவிடம், வாக்குமூலம் பெற்றுக்கொள்ள வேண்டும் என குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், எதிர்வரும் செப்டெம்பர் 10ஆம் திகதி வரை மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
43 minute ago
2 hours ago
3 hours ago