2025 ஒக்டோபர் 27, திங்கட்கிழமை

கரையை நோக்கி படையெடுக்கும் நண்டுகள்: மக்கள் அச்சம்

R.Tharaniya   / 2025 ஒக்டோபர் 27 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தின் சிலபகுதிகளில் உள்ளகடல் பகுதியில் நண்டுகள் கரையொதுங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேசசெயலாளர் பிரிவுக்குட்பட்ட சில கடற்பகுதிகளில் இவ்வாறு நண்டுகள் கரையொதுங்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஓந்தாச்சிமடம்,களுவாஞ்சிகுடி,களுதாவளை,தேற்றாத்தீவு ஆகிய பகுதிகளில் உள்ள கடற்பகுதிகளில் இவ்வாறான நண்டுகள் கரையொதுங்கிவருகின்றன.

சிவப்பு நிறத்திலான சிறியஅளவிலான நண்டுகளே இவ்வாறு கரையொதுங்கி வருவதாகவும் காலநிலை மாற்றங்களினால் இவ்வாறு நண்டுகள் கரையொதுங்குவதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

சில காலங்களில் இவ்வாறான செயற்பாடுகள் நடைபெறும் எனவும் கடலில் ஏற்படும் மாற்றங்களினால் இவ்வாறு நடக்கும் என்றும் மீனவர்கள் தெரிவித்தனர்.

வா. கிருஸ்ணா


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .