Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
J.A. George / 2019 ஜூலை 24 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
1986 ஆம் ஆண்டு ஜுலை மாதம் இடம்பெற்ற கலவரங்களில் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.
நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், இவ்வாறான படுகொலைகளில் ஈடுபட்டவர்களுக்கு இன்றுவரை தண்டனை பெற்றுக்கொடுக்கப்படாமை மிகவும் துரதிருஷ்டமான விடயம் என்றும் கூறினார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “இந்த நாட்டில் 36 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இன படுகொலையையும் பேரவலத்தையும் நான் நினைவுப்படுத்த விரும்புகின்றேன். மிக முக்கியமாக கறுப்பு ஜுலை கலவரத்திலும் வன்முறைகளிலும் 36 வருடங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கும் வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் திட்மிட்டு படுகொலை செய்யபபட்ட தமிழ் போராளிகளையும் இன்றைய தினம் நினைவு கூர்ந்து அவர்கது தியாகங்களை நினைந்து இந்த நாடாளுமன்றில் அஞ்சலி செலுத்துகின்றோம்.
சரியாக 36 வருடங்களுக்கு முன்னர் 1983 ஆம் ஆண்டு ஜுலை மாதம் இலங்கை நாடானது அப்போதையை ஆட்சியாளர்களால் பாதாளததுக்குள் தள்ளப்பட்டது. கறுப்பு ஜுலை தினத்தன்று கொல்லப்பட்ட அப்பாவி பொதுமக்கள் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலையில் தமிழ் மக்களுக்கு எதிராக இனவெறி அரங்கேற்றப்பட்ட நாள் இன்றாகும்.
யாழ் குடாநாட்டின் திருநெல்வேலியின் இடம்பெற்ற கண்ணிவெடி தாக்குதலில் 13 இராணுவ சிப்பாய்கள் பலியானது இதற்கு காரணமாக சொல்லப்பட்டாலும், தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் ஆட்சியாளர்களாலும் இனவாதிகளாலும் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.
பாதுகாப்பு தரப்பினருக்கு முன்னால் நடத்தப்பட்ட இந்ததாக்குதலின் பின்னணியில் சதியொன்று உள்ளமை அனைவருக்கும் தெரியும். 13 இராணுவத்தினர் பலியானமைக்கும் பொதுமக்கள் படுகொலைக்கும் நியாயமாகாது. இந்த சம்பவமே இலங்கையில் உள்நாட்டு போர் கூர்மையடையவும், 30 வருடங்கள் உள்நாட்டு யுத்தம் நீடிக்கவும் 1 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் தமது உயிர்களை இழக்கவும் காரணமாக அமைந்திருந்தது.
தொடர்ந்த வன்முறைகாளால் கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான சொத்துகள்அழிக்கப்பட்டன. பலர் வெளிநாடுகளுக்கு அகதிகளாக சென்றனர், பலர் கொல்லப்பட்டனர். இதனால் இலங்கையின் நற்பெயருக்கு சர்வதேசத்தின் மத்தியில் களங்கம் ஏற்பட்டது. இவ்வாறான குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு இன்றுவரை தண்டனை வழங்கப்படவில்லை என்பது ஜனாநாயக்கம் பற்றி பேசும் இந்த நாட்டின் துரதிருஷ்டம் ஆகும். இந்த நிலை இன்றும் தொடர்வது வேதனைக்குறியது.” என்றார்.
10 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago