2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கற்பிட்டியில் கடற்படை வீரர் ஒருவருக்கு தொற்று

Editorial   / 2020 மே 03 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கற்பிட்டி பிரதேசத்தில் சுற்றுலா ஹோட்டலில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள கடற்படை வீரர்களில், ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக, பீ.சீ.ஆர் பரிசோதனை மூலம் நேற்று (02)உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இவர் வெலிசர கடற்படை முகாமைச் சேர்ந்தவரென தெரிவிக்கப்படுகிறது. 

கொரோனா தொற்றுக்குள்ளாக குறித்த கடற்படை வீரரை கொழும்பு ஐ.டீ.எச் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க, கற்பிட்டி சுகாதார வைத்திய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

அத்துடன், இவரது குடும்ப உறுப்பினர்கள் சிலர் கற்பிட்டி பிரதேசத்தின் பல இடங்களில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X