2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

களனி கங்கைக்கு மணல் வேலி

Editorial   / 2019 ஜனவரி 18 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடும் மழை பெய்யும் காலங்களில், களனி கங்கை காரணமாக ஏற்படும் வெள்ளத்தைக் கட்டுப்படுத்த மணல் வேலி அமைக்கப்படவுள்ளதாகவும் அதற்காக, 24 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

கடுமையான மழை பெய்யும் காலங்களில், களனி கங்கையின் நீர் மட்ட​ம் உயர்வடைவதால், அதைச் சுற்றியுள்ள மக்கள், சிரமத்துக்கு உள்ளாவதன் காரணத்தாலேயே, அதற்கொரு தீர்வை வழங்கும் முகமாக, இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அத்தோடு, களனி கங்கையின் தெற்குப் பிரதேசத்துக்கு நீரை வழங்கும் புதிய வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் இதன்கீழ், கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த மக்களுக்கான நீர் விநியோகிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கொழும்பு நகருக்கும் புதிய நீர் விநியோகத்திட்டமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .