Janu / 2024 மே 27 , பி.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
2012ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தின் போது உயிரிழந்த , பாதாள உலகக் குழு உறுப்பினரான மஹரகம களு துஷாரவின் மகன் அவரது நண்பர்கள் மூவருடன் , மாத்தறை, பிக்வெல்ல பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (25) கைது செய்யப்பட்டுள்ளார் .
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொண்ட தேடுதலின் போதே குறித்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இதன்போது அவர்களிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் போதை குளிசைகள் அடங்கிய பொதி ஒன்றும், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது .
கைது செய்யப்பட்ட நால்வரும் , விருந்தொன்றை ஏற்பாடு செய்வதற்கும் துப்பாக்கியில் சிக்கியிருந்த சன்னங்களை அகற்றுவதற்கும் கொழும்பில் இருந்து மாத்தறைக்கு வந்ததாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .
10 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
26 minute ago