2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கழுகை கொன்று கொடூரம் புரிந்தவர்களில் இருவர் கைது

Princiya Dixci   / 2016 மார்ச் 10 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈவுவிரக்கமில்லாமல் கழுகொன்றின் தோலை உரித்து, பின்னர் அதன் கால்களை வெட்டிக்கொன்ற சந்தேகநபர்களில் இதுவரை, நேற்று புதன்கிழமை (09) இரவு, காலி - கதுருவ பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். விலங்கினங்கள் மற்றும் தாவரவளங்கள் சட்டத்தின் கீழ், இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். 

கடந்த சில நாட்களாக ஈவிரக்கமற்ற முறையில் கழுகின் தோலை உரித்து அதன் கால்களை வெட்டிக் கொல்ல முயலும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் உலாவி வருகின்றது. அதில் காணப்பட்ட சந்தேகநபர்களில் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவ்விருவரும்  நுகதுவ பகுதியைச் சேர்ந்த 40 வயதானவர்கள் எனத் தெரிவித்த பொலிஸார், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, கழுகினைப் பிடித்து தோலை உரித்து உணவுக்கென எடுக்க முயன்றமையை அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். இருப்பினும், கழுகின் வயிற்றுப்பகுதியைப் பிளந்து பார்த்த போது அதில் நாகபாம்பொன்று இருந்தமையால் தாங்கள் அதை உண்ணவில்லை என அவர்கள் தெரிவித்ததாக பொலிஸார் கூறினர். 

கழுகு இனமானது நாட்டின் அழிந்து வருகின்ற உயிரினம் என்ற ரீதியில் அவ்வினம் அழிவடைவதை ஒரு போதும் ஏற்க முடியாது எனவும் விலங்குரிமைச் சட்டத்தை அது மீறுவதாகவும் தெரிவித்து.

'சுதந்திர இலங்கை அறக்கட்டளை' (Freedom Sri lanka Foundation),'அவர்களை வாழவிடு' (Let them live) என்ற அமைப்புகள் இவ்விடயம் தொடர்பில் கடுமையான கருத்தினை ஊடகங்களில் பதிவு செய்திருந்தன. 

இந்தக் குற்றத்தை மேற்கொண்டவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் குற்றம் நிரூபிக்கப்படின் 05 வருடங்கள் வரை சிறைத்தண்டனை வழங்கப்பட முடியுமென வன ஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .