Editorial / 2019 நவம்பர் 01 , மு.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் பயன்படுத்துவதற்காக, காட்போட்டிலான 3,000 வாக்குப் பெட்டிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன என்று, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த காட்போட் பெட்டிகள், நீரில் கசிந்துவிடாத வகையில் மிகவும் பாதுகாப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
ஒரு காட்போட் பெட்டிக்கு, 1,500 ரூபாய் வரையில் செலவிடப்பட்டுள்ளதாகவும் பிளாஸ்டிக்கிலான பெட்டியொன்றுக்கு 8,500 ரூபாய் வரையில் செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
காட்போடிலான வாக்குப் பெட்டிகள், யாழ்ப்பாணம், வன்னி, அம்பாறை, குருநாகல், மட்டக்களப்பு, பொலன்னறுவை, புத்தளம், அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் பயன்படுத்தப்படவுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
10 Apr 2026
10 Apr 2026
10 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 Apr 2026
10 Apr 2026
10 Apr 2026