2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

காணாமற்போன 4 1/2 வயதுச் சிறுமி குறித்து தொடர் தேடுதல்

Editorial   / 2019 பெப்ரவரி 01 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் - சாலியவெவ, நீலகம பிரதேசத்திலிருந்து காணாமற்போன நான்கரை வயதுச் சிறுமியைத் தேடி, தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 30ஆம் திகதியன்று காணாமற்போன மேற்படி சிறுமி, அன்றைய தினம் காலை 7 மணிக்கு வீட்டில் இருந்துள்ள போதிலும், அதன் பின்னர் அவர் காணாமற் போயுள்ளதாக, அவருடைய உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த சிறுமியின் வீட்டிலிருந்து சுமார் 300 மீற்றர் தொலைவிலேயே கலா ஓயாவும் அத​னை அண்டியே, வில்பத்து தேசிய சரணாலயமும் அமைந்துள்ளது.

இந்நிலையில், சிறுமி காணாமற்போன நாள் முதல், பொலிஸாரால் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அதேவேளை, இதற்காக, பொலிஸ் மோப்ப நாய்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், நேற்று இரவு வரையில், இந்தச் சிறுமி தொடர்பில் எவ்விதத் தகவலும் கிடைக்காத நிலையில், இன்றைய தினமும் (01), தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், கடற்படையினரால், கலா ஓயாவில் தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .