R.Maheshwary / 2020 டிசெம்பர் 02 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹர சிறைச்சாலையின் நிர்வாக கட்டடத்திலிருந்து காணாமல் போயிருந்த, பிரித்தானிய யுகத்துக்குரிய 2 வாள்கள், சிறையில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சிறையில் ஏற்பட்ட அமைதியின்மையுடன் தொடர்புடையவர்களால் குறித்த வாள்கள் களவாடப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பொலிஸார், பொலிஸ் விசேட படையினரால் சிறையில் விசேட சோதனை நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டதாகவும் இதன்போது கைதிகளிடமிருந்து போதை மாத்திரைகள், கூர்மையான ஆயுதங்கள் என்பன மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 2 வாள்களும் 2 குழுவினர் வெவ்வேறாக வைத்திருந்ததாகவும் இதன்போது இவர்களுக்கு எதிரான குழுவினர் மீது வாள்களை வைத்திருந்த குழுவினர் தாக்குதல் நடத்திய காயப்படுத்தியுள்ளதுடன், இதன்போது 12 பேர் காயமடைந்திருப்பதாகவும் தெரியவந்தள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.
25 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
1 hours ago