Editorial / 2019 ஒக்டோபர் 29 , பி.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
கடந்த 13 நாள்களாக காணாமல் போயிருந்த 14 வயதுடைய சிறுவனொருவன் நானுஓயா ஆற்றிலிருந்து சடலமாக இன்று (29) மீட்கப்பட்டார்.
நானுஓயா- டெஸ்போர்ட் தோட்டத்தைச் சேர்ந்த குணசேகரன் சிவன்ராஜ் என்ற சிறுவன் இந்த மாதம் 16ஆம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ளாரென, அவரது பெற்றோரால் நானுஓயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து, நானுஓயா பொலிஸாரும், தோட்ட மக்களும் இணைந்து இச்சிறுவனைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில், இன்று காலை கொத்மலை ஓயாவுக்கு நீரைக் கொண்டுச் செல்லும் நானுஓயா ஆற்றின் மூங்கில் புதருக்கருகில் சிக்கியிருந்த நிலையில், சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில், நானுஓயா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
2 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago