2025 ஜூன் 30, திங்கட்கிழமை

காதர் மஸ்தான் எம்.பியின் வாகனம் விபத்து

Editorial   / 2019 மார்ச் 16 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் பயணித்த வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில், மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

இவ்விபத்து, பூனேவ, மககும்புகொல்லேவ பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

அநுராதபுரத்தில் இருந்து வவுனியா நோக்கி வந்துகொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் வாகனம், முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது.

இதன்போது, பெரியஉலுக்குளம பிரதேசத்தைச் ​சேர்ந்த தாய், தந்தை மற்றும் பிள்ளை ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த மூவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தின் பின்னர் நாமாளுமன்ற உறுப்பினர் வேறொரு வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டதாக பிரதேசவாசிகள் கூறுகின்றனர்.

சம்பவம் தொடர்பில், மதவாச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X