Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Editorial / 2024 ஜனவரி 07 , பி.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
காதலியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் காதலன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவமொன்று பிலியந்தலை பகுதியில் இடம்பெற்றுள்ளது என பிலியந்தலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காதலியைக் கொலைச் செய்ய பயன்படுத்திய கத்தியுடன் 24 வயதுடைய சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் செல்லப் பிராணி, மீன் விற்பனை செய்பவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொல்லப்பட்டவர் பியந்தல படகத்தர எல். எஸ். வத்தை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த ஜே.எம்., ஆயிஷா லக்மினி 26 வயது இளம்பெண்ணாவார். அப்பெண் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.
கொல்லப்பட்ட யுவதி தனது தாய், தந்தை மற்றும் சகோதரர் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் பகுதியிலுள்ள வீட்டுக்கு வாடகை அடிப்படையில் வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபரான காதலனுடன் கொல்லப்பட்ட யுவதி சுமார் மூன்று வருடங்களுக்கு முன்னர் காதல் உறவை வளர்த்துக்கொண்டு சுமார் மூன்று மாதங்களாக தனது காதலனை தவிர்த்து வந்துள்ளதாக சந்தேகநபரின் வாக்குமூலத்தில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
7 hours ago