Janu / 2024 ஜூன் 26 , மு.ப. 10:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
தம்புத்தேகம பஸ் நிலையத்தில் நின்றுக்கொண்டிருந்த பாடசாலை மாணவர் ஒருவர் போலி நாணயத்தாள்களுடன் கைது செய்யப்பட்டதாக தம்புத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.
நொச்சியாகம உடுநுவர காலனியைச் சேர்ந்த 17வயதுடைய மாணவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த மாணவன் செவ்வாய்க்கிழமை (25) பிற்பகல் தம்புத்தேகம பேருந்து நிலையத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமாக நின்றுக்கொண்டிருந்ததை அவதானித்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் , மாணவனை அழைத்து சோதனையிட்ட போது அவரிடமிருந்து போலி 500 ரூபாய் நாணயத்தாள்கள் ஆறு கைப்பற்றப்பட்டுள்ளது .
பின்னர், பொலிஸாரால் மேற்கொண்ட விசாரணைகளையடுத்து குறித்த மாணவனின் வீட்டை சோதனையிட்ட போது வீட்டில் இருந்து போலி பணம் அச்சடிக்கும் கருவிகளை கைப்பற்றியுள்ளனர்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .
25 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
41 minute ago