2025 மே 07, புதன்கிழமை

'கிளப் வசந்த' சுட்டுக்கொலை: பலர் படுகாயம்

Mayu   / 2024 ஜூலை 08 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

அத்துருகிரிய ஒருவல சந்தியில்  சற்றுமுன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 'கிளப் வசந்த' என அழைக்கப்படும் உரேந்திர வசந்த பெரேரா கொல்லப்பட்டதுடன் பாடகர் கே.சுஜீவா உட்பட பலர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அத்துருகிரிய  பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் அத்துருகிரிய மற்றும் ஹோமாகம வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாடகர் கே.சுஜீவா மற்றும் பலர் டாட்டூ ஸ்டுடியோ திறப்பு விழாவில் கலந்து கொண்ட போது துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, பாடகர் சுஜீவா மற்றும் மற்றுமொருவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

சுஜீவாவின் கால்களில் துப்பாக்கிச் சூட்டுக் காயம் ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X