2025 ஒக்டோபர் 31, வெள்ளிக்கிழமை

கீத் நொயார் தாக்கப்பட்ட சம்பவம்; வழக்கு விசாரணையை விரைவாக முடிக்க உத்தரவு

Editorial   / 2018 செப்டெம்பர் 26 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு
சித்த​ரவதை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகளை விரைவாக முடிக்குமாறு கல்கிசை மேலதிக நீதவான் லோசன அபேவிக்ரம குற்றவியல் புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வழக்கு விசாரணை நேற்று(25) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டப்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு, அது தொடர்பான ஆவணங்களை சட்டமா அதிபருக்கு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, குற்றவியல் புலனாய்வுப் பிரிவினரின் கேள்விகளுக்கு பாதுகாப்பு செயலாளர் பதில்களை வழங்கியிருக்கின்றபோதிலும், படுவத்த இரகசிய முகாம் தொடர்பில் எந்த ஆவணமும் அதில் இல்லை என்றும் குற்றவியல் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பென்சேகாவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளபோதிலும், இந்த வழக்குடன் தொடர்புடைய ஆவணங்கள் சில கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X