Janu / 2026 ஏப்ரல் 21 , பி.ப. 02:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமார் 10 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருட்களுடன், பாதாள உலக கும்பலை சேர்ந்த இருவர் பாயாகலை பொலிஸ் பிரிவில் வைத்து அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும், பிரபல பாதாள உலக குழு தலைவனும் பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரனுமான 'பாணந்துறை குடு சலிந்து' என்பவரின் நெருங்கிய சகாக்கள் என தெரியவந்துள்ளது.
பாணந்துறை வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையிலேயே இவர்கள் சிக்கியுள்ளனர்.
பாயாகலை நிர்மல வத்தை பகுதியில் வைத்து 42,350 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒரு சந்தேகநபரும் பாயாகலை கும்புகொட பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனையில், மேலும் ஒரு நபர் உள்ளிட்ட குழுவினர் 48,170 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடனும் சிக்கியுள்ளனர்.
பாணந்துறை வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் இந்தச் சோதனையை முன்னெடுத்திருந்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பாயாகலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
10 minute ago
21 minute ago
27 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
21 minute ago
27 minute ago
42 minute ago