Editorial / 2019 செப்டெம்பர் 24 , பி.ப. 02:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-துசித குமார டீ சில்வா
பேருவளை- மஹல்கந்த பிரதேசத்தில், 15 வயதுடைய சிறுமியுடன் களவில் வாழ்க்கை நடத்திவந்த, 19 வயதுடைய இளைஞனையும், குறித்த சிறுமியையும் பொலிஸார் இன்று (24) கைதுசெய்துள்ளனர்.
இரத்தினபுரி- அயகம பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சிறுமியின் வீட்டுக்கருகில், அண்மையில் இடம்பெற்ற திருமண நிகழ்வுக்குச் சென்றிருந்த குறித்த இளைஞன், அன்றைய தினம் சிறுமியுடன் காதல் வயப்பட்டு, அச்சிறுமியை தன்னுடன் அழைத்து வந்து, பேருவளை- மஹல்கந்த பிரதேசத்திலுள்ள வீடொன்றில் குடும்ப வாழ்க்கை நடத்தி வந்துள்ளார் என, பொலிஸார் மேற்கொண்ட விசாணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
சிறுமியின் தாய், அயகம பொலிஸ் நிலையத்தில் செய்துள்ள முறைப்பாட்டையடுத்து, பேருவளை பொலிஸார் குறித்த இருவரையும் கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட இருவரும், இரண்டு மாதங்களாக இருப்பிடங்களை மாற்றி, களவில் வாழ்ந்து வந்துள்ளனரென, பொலிஸார் தெரிவித்தனர். குறித்த இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், சிறுமியை நீதிமன்ற வைத்தியரிடம், வைத்திய பரிசோதனைக்காக ஒப்படைக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.
4 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
53 minute ago