2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

குப்பை திட்டத்தை எதிர்த்து புத்தளத்தில் அணிதிரண்ட மக்கள்

Editorial   / 2018 ஒக்டோபர் 12 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம். சனூன் 

புத்தளத்தை நாட்டின் குப்பை தொட்டியாக மாற்றும் முயற்சிக்கு எதிராக, புத்தளத்தில் தொடராக மேற்கொள்ளப்பட்டு வந்த சத்தியாக கிரக போராட்டம் இன்று(12) மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியாக விஸ்வரூபமெடுத்தது.

புத்தளம் அறுவாக்காட்டில் கொட்டப்படவுள்ள கொழும்பு குப்பை கூளங்களுக்கு எதிராக, புத்தளத்தில் 13 நாட்களாக தொடராக மேற்கொள்ளப்பட்டு வந்த தொடர் சத்தியாக்கிரக போராட்டம் எவ்வித முடிவுகளும் எட்டப்படாத நிலையில் 14 வது நாளான இன்று, சர்வமத பிரார்த்தனை நிகழ்வும் ஆர்ப்பாட்ட பேரணியும் இடம்பெற்றது.

புத்தளம் கொழும்பு முகத்திடலில் அமைக்கப்பட்டிருந்த விஷேட மேடையில் இருந்தவாறு சர்வமத தலைவர்களின் உரைகளும், பிரார்த்தனைகளும் இடம்பெற்றன. இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் புத்தளம் பிரதான சுற்று வட்டத்துக்கு வருகை தந்து அங்கிருந்து, குருநாகல் வீதி வழியாக புத்தளம் மாவட்ட செயலகத்தை அடைந்து புத்தளம் மாவட்ட சர்வமத ஒன்றிய தலைவர்களால் புத்தளம் மாவட்ட செயலாளரிடம் நான்கு பக்கங்களை கொண்ட மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .