2025 ஜூலை 19, சனிக்கிழமை

குருநாகல் மாவட்டத்தில் 326 பேர் சுய தனிமையில்

Editorial   / 2020 ஏப்ரல் 29 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இக்பால் அலி

குருநாகல் மாவட்டத்தில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகிய 326 பேர், சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனரென, வடமேல் மாகாண சுகாதாரப் பணிமனையின் பணிப்பாளர் என். பரீட் தெரிவித்தார்.

அலவ்வ, பொல்கஹவெல, மடஹபொல, நிக்கவெரட்டிய, கொடவெஹெர, தும்மலசூரிய, உடுபத்தாவ, மாவத்தகம, கல்கமுவ, குளியாப்பிட்டிய, மாஹோ, வாரியப்பொல, பண்டாரகொஸ்வத்தை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டு , உள்ளனரென, பணிப்பாளர் பரீட் தெரிவித்தார்.

தொற்றுக்குள்ளானவர்கள் குருநாகல் மாவட்டம் முழுவதும் உலாவித் திரிந்துள்ளார்களென, அவர்களுடன் தொடர்புப்படடவர்கள் மூலம் தெரியவந்துள்ளதாக, அவர் தெரிவித்தார்.

குருநாகல் மாவட்டத்தில் இதுவரை 13 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அதில் 9 பேர் இராணுவத்தினரென, அவர் மேலும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X