Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Simrith / 2025 மே 29 , பி.ப. 07:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
குருந்தூர் மலையில் கைது செய்யப்பட்ட இரு விவசாயிகளையும் ஜூன் 7ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க முல்லைத்தீவு நீதவான் இன்றைய தினம் (29) உத்தரவிட்டுள்ளார்.
குமுழமுனை தண்ணிமுறிப்பு குளத்தின் கீழான நீர்ப்பாசனத்தின் ஊடாக விவசாயம் செய்யும் நோக்கில் அக்காணியின் உரிமையாளர் தனது பணியாட்கள் மூலம் உழவு இயந்திரத்தைக் கொளண்டு கடந்த 10ஆம் திகதி குருந்தூர் மலை பகுதியில் இரு விவசாயிகளால் உழவு செய்துள்ளார்.
அதன்போது தொல்பொருள் தளத்தை சேதப்படுத்தியதாகக் கூறி, பௌத்த துறவி கல்கமுவ சாந்தபோதி தேரர் தொல்பொருள் திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார். அம்முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த விவசாயிகள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணையின் பின்னர் மே 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
தொடர்ந்து மே 29ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்ட நிலையில் மீண்டும் இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டதையடுத்து அவர்களின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
11 minute ago
19 minute ago
56 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
19 minute ago
56 minute ago
2 hours ago