Editorial / 2019 ஒக்டோபர் 19 , பி.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் எப்போதும் தயாராகவே இருப்பதாக அக்கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
தனியார் வானொலி ஒன்று வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர்,
தமிழ் முற்போக்குக் கூட்டணிப் பெற்றுக்கொடுப்பதாகத் தெரிவித்துள்ள 15 தீபாவளி முற்பணத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு தாம் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சகலருக்கும் வீடுகள் நிர்மாணித்துக்கொடுக்கப்படும். கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களே தமிழ் முற்போக்கு கூட்டணியில் இணைந்துகொண்டுள்ளனர் எனவும் கூறியுள்ளார்.
கோட்டாவின் ஆட்சியில் 25 பேர்ச் காணியில் தொழிலாளர்களுக்கு வீடுகள் நிர்மாணித்துக்கொடுக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.
2 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago