2025 மே 01, வியாழக்கிழமை

கொத்தலாவலைக்கு ஒதுக்கிய நிதி அம்பலம்

Freelancer   / 2021 ஓகஸ்ட் 04 , பி.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போதைய அரசாங்கம் இலங்கையின் கல்விக்காக ஒதுக்கிய மொத்த தொகையில் 50 சதவீதத்துக்கும் அதிகமான தொகையை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்துக்கு ஒதுக்கியுள்ளது என்று முன்னணி சோசலிச கட்சியின் செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்தார்.

நுகேகொடையிலுள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று (04) நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கையில் 10,500  அரச பாடசாலைகள் மற்றும் 15 க்கும் மேற்பட்ட அரச பல்கலைக்கழகங்கள் உட்பட முழு கல்வி முறைக்கும் ரூ. 21 பில்லியன் (ரூ. 2100 கோடி) ஒதுக்கப்பட்டுள்ளது. கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்துக்கு  மட்டும் ரூ .36 பில்லியன் (ரூ. 3600 கோடி) ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் போராட்டம் செய்வது பொருத்தமானதல்ல என்றால், தொற்றுநோய்க்கு மத்தியில் இரகசியமாக அதிமுக்கியத்துவம் வாய்ந்த சட்டமூலங்களை நிறைவேற்ற முயல்வதும் பொருத்தமானதல்ல என்றும் சுட்டிக்காட்டினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .