J.A. George / 2020 ஒக்டோபர் 08 , மு.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொது மக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்த்து, கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் முகமாக இன்று (08) மற்றும் நாளை (09) ஆகிய திகதிகளில் தமது அமைச்சின் கொன்சுலர் விவகாரங்கள் பிரிவினால் வழங்கப்படும் அனைத்து சேவைகளையும் இடைநிறுத்துவதற்கு வெளிநாட்டு அமைச்சு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சு நேற்று (07) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலுள்ள சிலின்கோ கட்டிடத்தில் அமைந்துள்ள கொன்சுலர் விவகாரங்கள் பிரிவு இன்று (08) மற்றும் நாளை (09) ஆகிய இரண்டு நாள்களில் பார்வையாளர்களுக்காக மூடப்படும்.
இதன்போது, வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களின் இறப்புக்கள் மற்றும் இறப்பு தொடர்பான ஆவண உதவிகள் மற்றும் 'ஏற்றுமதி ஆவணங்களை' சான்றளித்தல் தொடர்பான கோரிக்கைகள் மட்டுமே முன் நியமன அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்படும்.
இதேவேளை, முன் நியமனங்களை பின்வரும் அவசரத் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து பெற்றுக்கொள்ளலாம்.
வெளிநாட்டில் இடம்பெற்ற மரணம்: தொலைபேசி: +94 (011) 233 8836 /1094 (011) 233 5942
ஏற்றுமதி ஆவணங்களை சான்றளித்தல் : தொலைபேசி: +94 (011)2338812
2 hours ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
9 hours ago