Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 07 , பி.ப. 08:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக நாடுகள் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள இத்தருணத்தில், எவ்வித மத, அரசியல் பேதங்களும் இன்றி, நிவாரண வேலைத்திட்டகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
பிரதமர் நாட்டு மக்களுக்காக இன்று (07) ஆற்றிய விசேட உரையில் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, நாட்டில் கொரோனா நோயாளி ஒருவர் அடையாளர் காணப்பட்டவுடன், நோய் தாக்கத்திலிருந்து பாதுகாக்க பாடசாலைகள், பல்கலைக்கழகங்களை மூட நடவடிக்கை எடுப்பட்டது.
கொரோனா தொற்றுக்கு எதிராக அரசாங்கமும் மக்களும் யுத்தம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர்.
உலகில் 200 க்கு மேற்பட்ட நாடுகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன. அந்நாடுகளில் பலியானவர்களை எவ்வாறு மயானங்களுக்கு எடுத்துச் செல்கிறார்கள் என்பதை அவதானித்து இருப்பீர்கள்.
நாம் உயிர் வாழ்வதாக இல்லை என்பது, குறித்த வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த நாம் செயற்படும் விதத்தில் தங்கியுள்ளது.
குறித்த தொற்று பரவ ஆரம்பித்த நாள் முதல் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது.
நாட்டு மக்கள் வருமானம் ஈட்டும் வழிகள் முடங்கியுள்ளன. நாட்டில் குறித்த தொற்று ஒழிக்கப்பட்டதன் பின்னர், முன்னோக்கிப் பயணிப்பதற்கான செயற்பாடுகளை நாம் திட்டமிட வேண்டும். வீட்டுத் தோட்டங்களை அமைப்பதன் மூலம் எமக்கான உணவுத் தேவையை நிறைவு செய்யலாம் என்றார்.
மக்கள் வீடுகளில் இருந்து குறித்த வைரஸ் தொற்றை ஒழிக்க பங்களிப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்வதுடன், நாடு என்ற ரீதியில் சவால்களுக்கு மத்தியில் நாம் இதனை வெற்றிக்கொள்ள வேண்டும் என்றார்.
அத்துடன், தற்போது அரசாங்கத்துக்கு இருக்கும் ஒரே எதிரி கொரோனா வைரஸாகும் என, பிரதமர் இதன்போது தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
9 hours ago