Editorial / 2018 ஜூலை 03 , மு.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை, உப்புவௌி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தனது தாயின் இரண்டாவது கணவரை கத்தியால் வெட்டி கொலை செய்தாரென குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நபரை, குற்றவாளியாக இனங்கண்ட
திருகோணமலை மேல் நீதிமன்றம், அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
திருகோணமலை, ஆண்டாங்குளம் பகுதியைச்சேர்ந்த ஏ.எச்.சமீர லக்மால் (38வயது) என்பவருக்கே இவ்வாறு இன்று (03) மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
வழக்கின் தீர்ப்பு, திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியனால் வழங்கப்பட்டது.
திருகோணமலை, உப்புவௌி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆண்டாங்குளம் பகுதியில், கடந்த 2011 ஆம் ஜனவரி மாதம் 11 ஆம் திகதியே, இந்த கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில், சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவந்த நிலையிலேயே, இன்று (03) தீர்ப்பளிக்கப்பட்டது.
3 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago