2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

கொல்கத்தாவுக்கு வாங்க: ரணிலை அழைத்தார் மம்தா

Editorial   / 2023 செப்டெம்பர் 13 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொல்கத்தாவில் நடைபெற உள்ள தொழில் முனைவோர் மாநாட்டில் பங்கேற்க வருமாறு இலங்கை ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்கவிடம் இந்திய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேரில் அழைப்பு விடுத்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் உள்ள கொல்கத்தாவில் நவம்பர் 21,22 ஆகிய திகதிகளில் தொழில் முனைவோர் மாநாடு பெற உள்ளது.

 இதையொட்டி மாநிலத்திற்காக முதலீடுகளை ஈரப்பதற்காக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானார்ஜி, 12 நாள் பயணமாக டுபாய் மற்றும் ஸ்பெயினுக்குச் சென்றுள்ளார்.

 தடுபாய் விமான நிலையத்தில் புதன்கிழமை (13) அவர், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேசினார்.

விமான நிலைய ஓய்வறையில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, மேற்கு வங்கத்தில் நவம்பரில் நடைபெறும் தொழில் முனைவோர் மாநாட்டில் பங்கேற்குமாறு ரணில் விக்கிரமசிங்கவை மம்தா அழைத்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X