R.Maheshwary / 2020 டிசெம்பர் 30 , மு.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
நேற்று மாலை கொழும்பில் பெய்த கடும் மழை காரணமாக, 50 வயதுடைய ஆணொருவர் உயிரிழந்துள்ளார். இவர், வெலிமடையைச் சேர்ந்தவர் என விசாரணைகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது.
கொள்ளுபிட்டி- டுப்லிகேசன் வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடமொன்றில் பணியாற்றி வந்த இவர், குறித்த கட்டடத்தின் கீழ் தளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்குண்டே உயிரிழந்துள்ளாரென கொள்ளுபிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை கீழ்தளம் நீரில் மூழ்கிபோது, அங்கு நித்திரையிலிருந்த பலரும் அங்கிருந்து வெளியேறியுள்ள நிலையிலேயே குறித்த நபர், இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளாரென கொள்ளுபிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
41 minute ago
53 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
53 minute ago
1 hours ago
2 hours ago