2026 மே 06, புதன்கிழமை

கொழும்பில் கொரோனா கொந்தளிப்பு

Editorial   / 2020 டிசெம்பர் 10 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றது.

நேற்றுமுன்தினம் (08) மட்டும் 798 பேர், இனங்காணப்பட்டனர். அதில் 526 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர், என கொவிட்-19 தொற்றொழிப்பை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

175 பேர் வெலிக்கடை சிறைச்சாலையைச் சேர்ந்தவர்கள். அத்துடன் கொழும்பு மாவட்டத்தில், தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 12,604ஆக அதிரித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் 97 பேர் இனங்காணப்பட்டனர். அவர்களில் 55 பேர், மஹர சிறைச்சாலையைச் சேர்ந்த கைதிகள் அவர். கம்பஹா மாவட்டத்தில் மொத்தமாக 7,019 பேர், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.

அதற்கு மேலதிகமாக களுத்துறை மாவட்டத்தில் 53 பேரும், கண்டியில் 40, குருநாகலில் 11, இரத்தினபுரியில் 15, காலியில் 3, அம்பாறையில் 44, கேகாலை, மாத்தளையில் தலா ஒன்று, நுவரெலியாவில் 6 பேரும் அடங்குகின்றனர்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .