2025 ஜூலை 14, திங்கட்கிழமை

கொழும்பில் நிர்க்கதியான புத்தளம் மக்களுக்கு ஒரு நற்செய்தி

Editorial   / 2020 ஏப்ரல் 05 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம். சனூன் 

பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தொழிலுக்காக கொழும்புக்குச் சென்று சொந்த இடங்களுக்கு  திரும்ப முடியாமல் பரிதவிக்கும்,  புத்தளம் மாவட்ட  மக்களை மீள அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆப்தீன் எஹியாவினால் இந்த அசாதாரண சூழ்நிலையில் மக்களுக்கு உதவும் வகையில் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் அவரின் செயலாளர்களைக்கொண்டு அமைக்கப்பட்டுள்ள 'எஹியா செயலணிக்கு' கிடைக்கப்பெற்ற கோரிக்கைகளுக்கு இணங்கவே , இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


பொலிஸ் அனுமதியோடு வாகனத்தை அனுப்பி அவர்களை அழைத்து வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.  இதனை கேள்வியுற்ற அங்குள்ளவர்கள் தற்போது தொடர்புகளை ஏற்படுத்திய வண்ணம் உள்ளனர்.

இவ்வாறு கொழும்பில் வேலைக்காக சென்று நிர்க்கதியானவர்கள் புத்தளம் எஹியா செயலணி உறுப்பினர்களை தொடர்புக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

சுஹைப்தீன் - செயலாளர்- 0767961985 இஹ்ஸான் - இணைப்பு செயலாளர்- 0757015731

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .