2026 மே 14, வியாழக்கிழமை

கொழும்புக்குப் பின் கண்டிக்கு தடுப்பூசி

Niroshini   / 2021 மே 24 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல் மாகாணத்தின் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கான தடுப்பூசி ஏற்றல் பணிகளின் பின்னர், கண்டி மாவட்ட மக்களுக்கான தடுப்பூசி ஏற்றல் பணிகள் முன்னெடுக்கப்படும் என்று, அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், ரஷ்யாவிலிருந்து அடுத்த வாரம் கிடைக்கவுள்ள, கொரோனா வைரஸுக்கு எதிரான ஸ்பூட்னிக் தடுப்பூசி, கண்டி மாவட்ட மக்களுக்குச் செலுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“50 ஆயிரம் ஸ்பூட்னிக் தடுப்பசிகள், அடுத்தவாரம் இலங்கை வரவுள்ளன. மேலும் 1 மில்லியன் தடுப்பூசிகள், அடுத்த மாதம் முதல் வாரத்தில் கிடைக்கவுள்ளன. மேல் மாகாணத்துக்குப் பின்னர், கொரோனா தொற்றுப் பரவல் அதிகமாகக் காணப்படும் மாவட்டமாக கண்டி மாவட்டமே காணப்படுகிறது.

“கண்டியில் குண்டசாலை, மெத தும்பர, பாத்த தும்பர, கண்டி நகரம் மற்றும் கங்கவட்ட கோரளய போன்ற பிரதேசங்களிலேயே, அதிக கொரோனா தொற்றுப் பரவல் காணப்படுகிறது என, சுகாதாரத் தரப்பினரால் கண்டறியப்பட்டுள்ளது. அதனால், இப்பிரதேசங்களைச் சேந்த மக்களுக்கே, முன்னுரிமை அடிப்படையில், தடுப்பூசி செலுத்தப்படும்.

“இந்தத் தடுப்பூசி ஏற்றல் வேலைத்திட்டமானது, சுகாதாரத் தரப்பினராலும் இதனோடு தொடர்புடைய தொழில்நுட்பக் குழுவினராலுமே மேற்கொள்ளப்படுகிறது. அதனால், கண்டியில் தடுப்பூசி ஏற்றுவதற்கான பணிகள் அனைத்தும், அரசாங்கத்தினால் உரிய தரப்பினருக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ளது” என்று, அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .