Editorial / 2019 ஒக்டோபர் 30 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம், மகாநாயக்க தேரர்கள் முன்னிலையில் நாளை(31) கண்டியில் வெளியிடப்படவுள்ளது.
எதிர்வரும் 5 வருடங்களில் நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்வதற்கான சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபயவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஆய்வு செய்து அமைச்சர் சஜித் பிரேமதாச தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை உருவாக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள, அவர் செய்வதாகக்கூறும் விடயங்கள், எனது அமைச்சின் பக்கம் பார்த்தால், அதனை ஏற்கனவே நாங்கள் செய்துமுடித்துவிட்டோம். நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டியதே நாங்கள் தற்போது செய்ய வேண்டியது” என்றும் அமைச்சர் தயா கமகே கூறியுள்ளார்.
10 Apr 2026
10 Apr 2026
10 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 Apr 2026
10 Apr 2026
10 Apr 2026