2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

சார்க் கலாசாரத்தை இலங்கை காத்துள்ளது

Kogilavani   / 2016 ஒக்டோபர் 03 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் நடைபெறவிருந்த 19ஆவது சார்க் மாநாட்டில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று, இலங்கை எடுத்தத் தீர்மானமானது, ஒரு தரப்பை மாத்திரம் கருத்திற்கொண்டு எடுத்த தீர்மானம் இல்லை என்று தெரிவித்த அரசாங்கம், சார்க் கலாசாரத்தை பாதுகாக்கும் வகையிலேயே இலங்கை நடவடிக்கை எடுத்துள்ளதெனவும் கூறியது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த மின்வலு மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி பிரதியமைச்சர் அஜித் பி.பெரேரா, சார்க் மாநாடு தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை விமர்சிக்குமளவுக்கு, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு, இராஜதந்திர நடவடிக்கைகள் தொடர்பான அறிவு போதாது என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன், ஒரு நாட்டினால் பங்குகொள்ளமுடியாதவிடத்து, சார்க் மாநாட்டை ஒத்திவைத்த பல சந்தர்ப்பங்கள், வரலாற்றில் உண்டு எனவும், பிரதியமைச்சர் பெரேரா, மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .