2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

சிறு பொலிஸ் நிலையங்களை அமைக்க நடவடிக்கை

George   / 2017 ஜனவரி 27 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜே.ஏ.ஜோர்ஜ்

பெரிய பரப்பளவு கொண்ட பிரதேசங்களில், பெரிய பொலிஸ் நிலையங்களை அமைத்து மக்களுக்கு சேவை வழங்குவதைவிட சிறு பொலிஸ் நிலையங்களை அமைத்து அதிக மக்களுக்கு சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜெயக்கொடி தெரிவித்தார்.

பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 475 ஆவது பொலிஸ் நிலையம், நுகேகொடை, கொதட்டுவ பிரதேசத்தில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

7 கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கியதாக இந்த புதிய பொலிஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், மக்களுக்கு இலகுவாக சேவையினை வழங்குவதற்காக நாட்டிலுள்ள பொலிஸ் நிலையங்களில் எண்ணிக்கையை 600ஆக அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, பல்லேககல மற்றும் யக்கல ஆகிய பிரதேசங்களில் இரண்டு பொலிஸ் நிலையங்கள் கடந்தவாரம் திறந்துவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, நுகேகொடை, கொதட்டுவ பிரதேசத்தில் பொலிஸ் நிலையம், சட்ட மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தலைமையில் இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .