Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஒக்டோபர் 04 , மு.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக, சிங்களே ஜாதிக பெரமுன (சிங்கள தேசிய முன்னணி) அமைப்பினால், பொலிஸ் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள, அவ்வமைப்பின் தலைவர் அகுலுகல்லே சிறி ஜினானந்த தேரர் கூறியுள்ளதாவது,
“தெற்கிலுள்ள மக்களைச் சீண்டும் வகையிலும் பயங்கரவாதத்துக்குப் பாதையமைக்கும் வகையிலுமே, வடக்கு முதலமைச்சரின் அண்மைக்காலக் கருத்து கள் அமைந்திருந்தன. இதற்கு எதிராக, எமது அமைப்பைப் போன்று பல அமைப்புக்களும், தங்களது எதிர்ப்புக்களை வெளிப்படுத்தியுள்ளன.
எமது எதிர்ப்பை, ஆர்ப்பாட்டமொன்றாகக் காட்டுவதில் மாத்திரம் பயனில்லை. வடக்கு முதலமைச்சரைப் போன்று, வேறு மாகாணத்தைச் சேர்ந்த முதலமைச்சரோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களோ செயற்படக்கூடாது என்பதில், எமது சிங்கள ஜாதிக பெரமுன, உறுதியாக இருக்கின்றது.
அதனால், இனவாதத்தைத் தூண்டும் வகையில் செயற்பட்ட வடக்கு முதலமைச்சருக்கு எதிராக, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதனால், அவருக்கு எதிராக, பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடொன்றைச் செய்துள்ளோம்” என, தேரர் மேலும் தெரிவித்தார்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago