Editorial / 2019 ஒக்டோபர் 31 , பி.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
“புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி, மலையகத்துக்காக பெற்றுள்ள உத்தரவாதங்கள்” என, தெரிவித்து அமைச்சர் மனோ கணேசன் சில விடயங்களை தனது பேஸ்புக் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள,
1)மலையக சமூக மேம்பாட்டுக்காக விசேட ஜனாதிபதி செயலணி
2)மலையக தமிழ் குடும்பங்களுக்கு சொந்த உறுதியுடன் 7 பேர்சஸ் காணியும், அதில் வீடும் வழங்கப்படுவதை உறுதி செய்வோம்.
3)இந்த காணி வழங்களில் காணப்படும் அனைத்து நிர்வாக தடைகளும் நீக்கப்படும்.
4)தோட்டப்பகுதிகளில் 10 தேசிய பாடசாலைகள் அமைக்கப்படும்
5)உயர்கல்விக்கான வாய்ப்பை மேம்படுத்த மலையக பல்கலைக்கழகம். (Highland University) உருவாக்கப்படும்.
6)தொழில் வலயங்களும், அவற்றுடன் தொடர்புற்ற தொழிற்பயிற்சி நிறுவனங்களும் தோட்ட பிரதேசங்களில் இங்குள்ள இளைஞர்களுக்காக அமைக்கப்படும்.
7)நாடெங்கும் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் மலையக தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான நன்னோக்கு எதிர்மறை திட்டம் (Affirmative Action) நடைமுறையாகும்.
8)நாட்டின் ஏனைய பிரதேச சுகாதார சேவைக்கு ஒப்பான தரமான சுகாதார சேவையை தோட்டப்புறத்திற்கும் பெற்றுத் தருவோம்
9)தோட்டத்தொழிலாருக்கு ரூ.1500/= நாளாந்த சம்பளம்.
10) "மலையக தமிழ் விவசாயி" களாக, நிலையான வருமானம் பெற்றுக்கொள்வதற்காக, தனியார்/அரச பெருந்தோட்டங்கள் மீள் கட்டமைப்பு செய்யப்படும். இந்த மலையக விவசாயிகளிடமிருந்து விளைபொருட்களை விலைக்கு வாங்கி, தோட்ட நிறுவனங்களும், இந்த மலையக விவசாயிகளும் பங்காளர்களாகும் வெளிவாரி தொழில் முறைமை உத்தரவாதம் செய்யப்படும்.
ஆகிய உத்தரவாதங்களை தமிழ் முற்போக்கு கூட்டணி, மலையக மக்களுக்காக பெற்றுக்கொடுத்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

8 hours ago
10 Apr 2026
10 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
10 Apr 2026
10 Apr 2026