Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2016 டிசெம்பர் 30 , மு.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமலை ராஜ்குமார்
அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள அபிவிருத்தி (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம், மேல் மாகாண சபையிலும், 24 மேலதிக வாக்குகளால் தோல்வியடைந்தது. இந்தச் சட்டமூலத்துக்கு எதிராக 52 வாக்குகளும் ஆதரவாக 28 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஜாதிக்க ஹெல உறுமய ஆகிய கட்சிகளின் மேல்மாகாணசபை உறுப்பினர்களே, இச்சட்டமூலத்துக்குக்கு எதிராக வாக்களித்தனர். சட்டமூலத்துக்கு ஆதரவாக, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
சுயாதீன உறுப்பினர்களான சுசில் கிந்தெல்பிட்டியவும் ஜனநாயக தேசிய முன்னணியின் உறுப்பினர்கள் இருவரும், இவ்வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.
இந்த விசேட சட்டமூலமானது, வடக்கு, வடமத்தி, வடமேற்கு, சப்ரகமுவா, தென், ஊவா, மத்தி மற்றும் மேல் மாகாணம் என எட்டு மாகாணங்களிலும் தோல்வியடைந்தது.
இந்நிலையில், கிழக்கு மாகாண சபையில் மாத்திரமே இச்சட்டமூலம், இதுவரையில் சமர்ப்பிக்கப்படவில்லை. கிழக்கு மாகாண முதலமைச்சர், நாட்டில் தற்போது இல்லாமை காரணமாக, இன்றைய தினமும் (30), இச்சட்டமூலம் கிழக்கு மாகாணசபையில் சமர்ப்பிக்க வாய்ப்பில்லை. மாகாணசபை அமர்வு, ஏற்கெனவே, எதிர்வரும் ஜனவரி 30ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இச்சட்டமூலம், பிரதமரின் அறிவுறுத்தலுக்கமைய சில திருத்தங்களுடன் மாகாண சபைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் போது, திருத்தத்துடன் கூடிய சட்டமூலமே விவாதத்துக்கு எடுக்கப்பட்டு வாக்களிப்பு நடத்தப்படும் என, மாகாணசபைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், ஆளுநரின் விசேட ஏற்பாட்டுக்கமைய, எதிர்வரும் 10ஆம் திகதியன்று, கிழக்கு மாகாணசபை கூடப்பட்டு, இச்சட்டமூலத்தைச் சமர்ப்பிப்பதற்கான வாய்ப்புக்களும் காணப்படுகின்றன என்றும், மாகாணசபைத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
20 minute ago
27 minute ago
32 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
27 minute ago
32 minute ago
37 minute ago