2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

சட்டவிரோதமாக மாடுகளை வெட்டிய இருவர் கைது

George   / 2017 ஜனவரி 01 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹியங்கனை - பஹரககம்மன பிரதேசத்தில் சட்ட விரோதமான முறையில் மாடுகளை வெட்டிய நபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மஹியங்கனை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து, முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்களை கைதுசெய்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

சந்தேகநபர்களை கைதுசெய்யும் போது, அவர்களிடமிருந்து 128 கிலோகிராம் மாட்டிறைச்சி கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேககநபர்கள் இருவரும் மாபாகடவெவெ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்களை மஹியங்கனை மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X