2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

சடலம் மீட்பு

Editorial   / 2019 மார்ச் 16 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பலவெளி, சாந்த மைக்கல்வத்த தென்னந்தோட்டத்திலிருந்து, நபர் ஒருவர் நேற்று (15) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மஹகும்புக்கடவல பகுதியைச் சேர்ந்த அமரசிங்க சிறில் ஜயராஜபூர (வயது 69) என்பவரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த முந்தல் பொலிஸார், சடலத்தை மீட்டனர்.

சடலமாக மீட்கப்பட்டவரின் சடலத்தைச் சுற்றி இரசாயன பதார்த்தங்கள் காணப்பட்டுள்ளதுடன், இரத்தக் கரைகளும் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சந்தேகத்துக்கிடமான இந்த மரணம் தொடர்பில் பல கோணங்களில், விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் ௯றினர்.

அத்துடன், சடலம் கண்டெடுக்கப்பட்ட குறித்த தோட்டத்துக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில், முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .