2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

சந்திரிகாவின் யோசனையில் மனோ குறுக்கீடு

George   / 2016 ஒக்டோபர் 02 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க பணியகத்தின் ஊடாக உருவாக்கப்பட்டு, அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள யோசனைக்கு, தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தனது கருத்தினை கேட்காது குறித்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதால் அதற்கு, அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

எனினும், தனது அமைச்சு மற்றும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க பணியகம் ஆகியன இணைந்து புதிய யோசனையை முன்வைக்கவுள்ளதாக அவர் தனியார் வானொலி ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

'இந்த யோசனையானது, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமைத்துவத்தின் கீழ், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க பணியகத்தின் ஊடாக உருவாக்கப்பட்டுள்ளது.

நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவது தொடர்பில் எனது அமைச்சுக்கும் பொறுப்பு உள்ளது.

இந்த யோசனையில் எனது அமைச்சினால் எந்தவித தொடர்பும் பெற்றுக்கொள்ளப்படவில்லை. அதன்காரணமாகவே இந்த யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பிப்பதை பிற்போடுமாறு கேட்டேன்' என மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .