Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2023 ஓகஸ்ட் 22 , பி.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
சந்திரயான்-3 மிஷனை கிண்டல் செய்யும் தொனியில் நடிகர் பிரகாஷ் ராஜ் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவு சர்ச்சையான நிலையில், பிரகாஷ் ராஜ் மீது கர்நாடகாவில் பாகல்கோட் மாவட்டப் பொலிஸில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் புகாரை, இந்து அமைப்பினர் அளித்துள்ளனர்.
கடந்த ஓகஸ்ட் 20-ஆம் திகதி நடிகர் பிரகாஷ் ராஜ் எக்ஸ் (ட்விட்டர்) சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தாதார். அதில், ஒரு நபர் பனியன், லுங்கியில் ஒரு கோப்பையில் இருந்து தேநீர் ஊற்றுவது போல் ஒரு கேலிச் சித்திரம் இடம்பெற்றிருந்தது. கூடவே "நிலவில் இருந்து விக்ரம் லேண்டர் எடுத்த முதல் புகைப்படம்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
சந்திரயான்-3 மிஷனை ட்ரோல் செய்யும் வகையில் நடிகர் பிரகாஷ் பகிர்ந்த கருத்தால் கொந்தளித்த நெட்டிசன்கள், இந்தியாவின் ஒரு லட்சியப் பயணத்தை எள்ளி நகையாடிவிட்டதாக பிரகாஷ் ராஜுக்கு கண்டனங்கள் தெரிவித்தனர்.
நடிகர் பிரகாஷ் ராஜ் #justasking என்ற ஹேஷ்டேகின் கீழ் நீண்ட காலமாக மத்திய அரசையும் பிரதமர் மோடியையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அதுவும் குறிப்பாக அவருடைய பால்ய வயது தோழியான எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளருமான கவுரி லங்கேஷின் படுகொலைக்குப் பின்னர் அவருடைய விமர்சனங்கள் மிகக் கடுமையாக தாக்கியுள்ளன.
இந்நிலையில், அவருடைய முந்தைய ட்வீட்களில் பிரதமரை டீ விற்கும் நபர் என்று பிரகாஷ் ராஜ் கிண்டலடித்துள்ளதால் நேற்று அவர் வெளியிட்ட கேலிச்சித்திரமும் பிரதமரை கிண்டல் செய்யவே பகிரப்பட்டது என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.
நெட்டிசன்களின் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த பிரகாஷ் ராஜ், "வெறுப்பு எப்போதும் வெறுப்பை மட்டுமே காணும். ஆர்ம்ஸ்ட்ராங் காலத்து ஜோக் ஒன்றை சுட்டிக்காட்டியே நான் பதிவிட்டிருந்தேன். கேரள தேநீர் விற்பனையாளர்களை பகடி செய்யும் நகைச்சுவை அது. உங்களுக்கு ஒரு நகைச்சுவையைக் கூட ரசிக்க முடியவில்லை என்றால். கொஞ்சம் வளருங்கள்" என்று கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
40 minute ago
53 minute ago
2 hours ago