2025 ஜூலை 14, திங்கட்கிழமை

சந்தேகநபரை கைதுசெய்த பொலிஸாருக்கு நடந்த சம்பவம்

Editorial   / 2020 ஏப்ரல் 06 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கெக்கிராவ பொலிஸ் நிலையப் குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் 8 பேரை, சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த, கெக்கிராவ பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பொலிஸாரால் தேடப்பட்டுவந்த குற்றச்செயலுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர், கெக்கிராவ மேல் பகுதியில் வைத்து, நேற்று (05) மாலை கைதுசெய்யப்பட்டார்.

குறித்த சந்தேகநபர் அவரது சகோதரனுடன்  பொலிஸாருக்கு சிக்கிவிடாது, அப்பகுதியில் 8 தினங்கள் மறைந்திருந்துள்ளார். இந்நிலையில், சகோதரன் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதனையடுத்து, சந்தேகநபரை கைதுசெய்ய சென்ற அதிகாரிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அநுராதபுரம்- குருந்தகுளம் பகுதியைச் சேர்ந்த நபரே, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவராவார்;.  

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .