2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சனத் தலைமையில் புதிய குழு

Freelancer   / 2023 ஏப்ரல் 03 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய, இலங்கை துடுப்பாட்டத்திற்கான  தொழிநுட்ப ஆலோசனைக் குழுவின் தலைவராக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜயசூரியவுடன் குழுவின் உறுப்பினர்களாக பர்வீஸ் மஹரூப், சரித் சேனாநாயக்க, அசந்த டி மெல் மற்றும் கபில விஜேகுணவர்தன ஆகியோர் இணைந்து கொள்ளவுள்ளனர்.

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச பதவியில் இருந்த போது இதே போன்ற ஒரு குழு மஹேல ஜெயவர்தனவின் தலைமையில் இருந்தது. ஆனால் அந்தக் குழு நாமலின் பதவி ராஜினாமாவைத் தொடர்ந்து கடந்த ஆண்டு கலைக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .