2025 செப்டெம்பர் 06, சனிக்கிழமை

செம்மணி இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்றுடன் நிறைவு

Freelancer   / 2025 செப்டெம்பர் 06 , பி.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

செம்மணி - சித்துப்பாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் 45 ஆவது நாள் அகழ்வு இன்றுடன் நிறைவடைந்துள்ளது. 

அதன்படி, இதுவரையில் செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இருந்து 240 என்புக்கூடுகள் வெளிப்பட்டுள்ளன. 

அவற்றில் 239 என்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வி.எஸ் நிரஞ்சன் தெரிவித்தார். 

இதேவேளை, செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி வழக்கையும் கிருஷாந்தி கொலை வழக்கையும் ஒன்றாக இணைப்பதாக இருந்தால் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். R

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .