Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 12 , பி.ப. 03:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுஜிதா,கெளசல்யா,புஷ்பராஜ்
அடிப்படை சம்பளத்தை உயர்த்தக் கோரி, தங்கக் கலை தோட்ட கிம்ரு பிரிவு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தங்கக் கலை தோட்ட கொழுந்து மடுவத்தின் முன்பாக, இன்று காலை 8 மணியிலிருந்து 9.30 மணி வரை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 150 தொழிலாளிகள் கலந்து கொண்டனர்
கூட்டு ஒப்பந்தம் ஓரிரு தினங்களில் கைச்சாத்திடப்படவுள்ள நிலையில், தமது சம்பளத்தை ரூபா 1,000 ஆக அதிகரிக்குமாறும், தீபாவளி முற்பணத்தையும் அதிகரித்து தருமாறும் கோரி சுலோகங்கள் ஏந்தி, கோஷங்கள் எழுப்பி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒவ்வொரு முறையும் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடும் போதும் சம்பள உயர்வுக்காக தாம் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டதாக அவர்கள் விசனம் தெரிவித்தனர். அத்தோடு முதலாளிமார் சம்மேளனமும் கூட்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் தொழிற்சங்கங்களும் தமது பொருளாதார நிலைமை தொடர்பில் ஏன் கவனம் செலுத்துவதில்லை என்றும் மக்கள் கேள்வி எழுப்பினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Jul 2025
14 Jul 2025
14 Jul 2025